'தவெக முன்னிலை' - விஜய் குடும்பம் கொண்டாட்டம்
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் அடையாறு இல்லத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் அடையாறு இல்லத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106 இடங்களிலும் அதிமுக கூட்டணி 69 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தொங்கு சட்டப்பேரவை தான் வரும் என நினைக்கிறேன்.”
இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் முழுவீச்சில் பரப்புரை மேற்கொண்டும் இத்தகைய முடிவு வந்திருப்பது குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “திமுக தன் கடமையை முழுமையாக செய்தது, மக்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர்.
இந்த முடிவுகளின் பின்னணி குறித்து இனிமேல் தான் ஆராய வேண்டும்.” என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றை இந்த பக்கத்தில் தொடர்ந்து வழங்கிவருவது செய்தியாளர் நந்தினி வெள்ளைச்சாமி.
இந்த பக்கத்தில் நீங்கள் தற்போது தான் இணைந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
காலை 12 நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 57 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
'தவெக முன்னிலை பெற்றுள்ளது மாற்றத்தைக் குறிக்கிறது' என பிபிசி தமிழிடம் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் மாலன்.
தற்போதைய நிலவரப்படி தவெக 106 இடங்களிலும் அதிமுக 69 இடங்களிலும் திமுக 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 111 தொகுதிகளில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் என்ன நிலவரம் என்ன என்பதை இக்கட்டுரையில் விரிவாக படிக்கலாம்:
சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் பனையூர் தவெக அலுவலகம் முன்பு கொண்டாட்டம்
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முன்னிலை நிலவரம் (காலை 11:30 மணி)தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்களுக்கு http://bbc.in/4f04fZv
தமிழ்நாடு, புதுச்சேரியில் முன்னிலை விவரங்கள் குறித்து விரிவாக அறிய: https://www.bbc.com/tamil/articles/c202nd32v5ro
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கண்ணீருடன் பேசிய திமுக தொண்டர்
தமிழ்நாட்டில் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரத்தொடங்கியுள்ள தொண்டர்கள், அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முதலமைச்சர் வேட்பாளர்களான மு.க.ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை நிலவரம்...
தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்களுக்கு bbc.in/4f04fZv
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தவெக 105 இடங்களிலும் அதிமுக 72 இடங்களிலும் திமுக கூட்டணி 56 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக கூட்டணி தற்போதைய சூழலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் சோகமாக உள்ள காட்சிகள்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 102 இடங்களிலும் அதிமுக கூட்டணி 70 இடங்களிலும் திமுக 62 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 82 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும் தவெக 75 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 82 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும் தவெக 75 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்) 89 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 48 இடங்களிலும், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அசாமைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 92 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் ஃபல்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆரம்பகட்ட நிலவரம் வெளியாகி வருகின்றன. அதுகுறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் களத்திலிருந்து தகவல்களை வழங்குகிறார்.
கேரளாவைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்) 36 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 23 இடங்களிலும், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 111 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 95 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அசாமைப் பொருத்தவரையில் காலை 08:45 மணி நிலவரப்படி பாஜக 46 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் 13 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் ஃபல்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.