காணொளி: ஏமன் விமான ஓடுதள தாக்குதலுக்கு சௌதியை குற்றம்சாட்டும் ஹூத்தி

காணொளிக் குறிப்பு, ஏமன் விமான ஓடுதள தாக்குதலுக்கு சௌதியை குற்றம்சாட்டும் ஹூத்தி
காணொளி: ஏமன் விமான ஓடுதள தாக்குதலுக்கு சௌதியை குற்றம்சாட்டும் ஹூத்தி
பிரசுரிக்கப்பட்டது

ஏமனில் ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி இது.

சனா விமான நிலையத்தை தாங்கள் குண்டுவீசி தாக்கியதாக ஏமன் அரசு தெரிவித்தது.

இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி குழுவினரை ஏற்றிச் சென்ற விமானத்தைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு கூறியது.

இந்த சம்பவத்திற்கு செளதி அரேபியாவை குற்றம்சாட்டிய ஹூத்தி குழுவினர், செளதி மீது ஏவுகணைகளை ஏவினர்.

ஓடுபாதை மீதான தாக்குதல் குறித்து செளதி அரேபியா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பின்னர் அந்த விமானம் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ஏமன் அரசு தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு