காணொளி: இரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி ஜே.டி வான்ஸ் கூறியது என்ன?
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - இரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், "நாங்கள் 21 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இரான் தரப்புடன் பல முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. அது நல்ல செய்தி.
ஆனால் மோசமான செய்தி, நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை. இது அமெரிக்காவை விட, இரானுக்கு தான் அதிக பாதிப்பை தரும் என்று நினைக்கிறேன்.
அதனால், எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் அமெரிக்காவுக்கு திரும்புகிறோம்.
எங்களின் வரம்புகள் என்ன, எந்த விஷயங்களில் சமரசம் செய்ய தயாராக இருக்கிறோம், எந்த விஷயங்களில் இல்லை என்பதையும் நாங்கள் தெளிவாக சொல்லியுள்ளோம். அதை மிக தெளிவாக சொல்ல முடிந்த அளவுக்கு சொல்லியிருக்கிறோம்.
ஆனால் அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்கவில்லை." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



